தமிழ்நாட்டுக்கு வாரந்தோறும் கூடுதலாக 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் “தமிழ்நாட்டில் இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தடுப்பூசி முகாமில் 28லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்டமாக 19ம் தேதி நடந்த தடுப்பூசி முகமில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை 3 கோடியே 97 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மேலும் பலருக்கு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்பதோடு முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். ஆகவே, அக்டோபபர் 31ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் வாரம்தோறும் தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
























