ரஷ்ய நகரமான பெர்மில் உள்ள பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை ஒரு மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிமீ (800 மைல்) தொலைவில் உள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தானே கொல்லப்பட்டதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் நடாலியா பெச்சிஷ்சேவா கூறினார்.
முன்னதாக துப்பாக்கி சூத்திலிருந்து தப்பிக்க மாணவர்கள் முதல் மாடியின் ஜன்னல்களிலிருந்து குதித்து, பாதுகாப்பிற்கு ஓடுவதற்கு முன்பு தரையில் பலமாக மாணவ மாணவிகள் விழும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தங்கள் வகுப்பறைக்குள் நுழைவதைத் தடுக்க நாற்காலிகளில் இருந்து தடுப்புகளை உருவாக்கி ஒளிந்து கொண்டதாகவும், அப்பொழுது வகுப்பறையில் சுமார் 60 பேர் இருந்ததாகவும், உடனடியாக கதவை மூடி நாற்காலிகளால் அடைத்தோம் என மாணவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
துப்பாக்கியால் சுட்டவர் 18 வயது மாணவர் எனவும், அவர் ஏற்கனவே துப்பாக்கி, ஹெல்மெட் மற்றும் வெடிமருந்துகளுடன் சமூக ஊடகத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாகவும் என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் கூறுகின்றன.

துப்பாக்கி சூடு சம்பந்தமாக இந்திய தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் அதிர்ச்சியடைந்தேன்; உயிர் இழப்புக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் & காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்றும், உள்ளூர் அதிகாரிகள் , இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























