பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகப் பாஜகவினர் தமிழகமெங்கும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாகச் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூமைப்பணியை மேற்கொண்டனர்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழகப் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப்பணியில் தொண்டர்களோடு இணைந்து ஈடுபட்டனர். இருவரும் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றினர்.

























