டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இடைக்கால கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் கேப்டனாகத் தொடர்வார் என டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
🚨 OFFICIAL STATEMENT 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) September 16, 2021
JSW-GMR co-owned Delhi Capitals today announced that Rishabh Pant will continue as Captain for the remainder of the #IPL2021 season.#YehHaiNayiDilli pic.twitter.com/yTp2CZHqYj
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகினார். இதன் காரணமாக இடைக்கால கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் விளையாட வந்துள்ளார். இச்சூழலில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மீண்டும் ஷ்ரேயா அய்யர் கேப்டனாவாரா? இல்லை இடைக்கால கேப்டனான ரிஷப் பண்டே கேப்டனாகத் தொடர்வாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்டே கேப்டனாகத் தொடர்வார் என்று அறிவித்திருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் டெல்லி அணி முதலிடத்தில் இருக்கிறது. கோப்பையை வெல்லப்போகும் அணிகளுக்கான எதிர்பார்ப்பில் டெல்லி அணி முதன்மையாக இருக்கிறது. யார் கேப்டன் என்கிற குழப்பத்துக்கு தற்போது நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
























