சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4415.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 50 ரூபாய் குறைந்து ரூபாய் 4365.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35320.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 400 குறைந்து ரூபாய் 34920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசுககள் குறைந்து ரூபாய் 65.50 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65500.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
























