இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியளராகப் பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தினகரன் சிவலிங்கம் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் காலா, கபாலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். இந்நிலையைல் அவர் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும், பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் T.N அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், முன்ணணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வெற்றி பெற்ற நிலையில் முழுக்க நகைச்சுவையையும்,உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இப்படத்திற்கும் நல்ல தொடக்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























