தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட காரணத்தால் பிரிக்கப்பட்ட/ புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாநில காவல்துறைக்குப் பதிலாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பயன்படுத்த வேண்டுமென்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளர்.
























