நீட் தேர்வு பயம் காரணமாக நிகழும் தற்கொலைகளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் “இது ஒரு நாடு இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு” என்று பதிவிட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீட் தேர்வு பயம் காரணமாக தனுஷ் என்கிற மாணவனும் கனிமொழி என்கிற மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரும் பரபரப்பையும் நீட் தேர்வுக்கு எதிரான கண்டனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
























