தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களைக் கடந்த நிலையில் அக்டோபர் மாதத்திலிருந்து ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பெரிய அளவிலான பார்வையாளர்கள் இருப்பதால் அடுத்த சீசன் எப்போது என்கிற எதிர்பார்ப்பும் யாரெல்லாம் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற ஆவலும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் டிக்டாக் புகழ் ஜிபி முத்து பிக்பாஸ் செட்டுக்குள் நின்றிருப்பது போலான ஓர் புகைப்படம் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஜி.பி.முத்து, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், நடிகை ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, ஜான் விஜய், ‘குக் வித் கோமாளி’ சுனிதா, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய் ஆகியோர் அடங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது மேலும் இப்பட்டியலில் ‘சின்னத்தம்பி’ சீரியல் நாயகி பவானி ரெட்டி மற்றும் திரைப்பட நடிகை பார்வதி நாயர் ஆகியோர் இப்பட்டியலில் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதத்தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 5 வெளியாகும் என சொல்லப்படுகிற நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
























