சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்றைய சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழகங்களுக்கான ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அது குறித்தான அறிவிப்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினாராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன் மற்றும் கணேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
























