அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடி கிராண்ட்ஸ்லாம் வென்றதன் மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் எம்மா ரடுகானு.

பிரிட்டனைச் சார்ந்த எம்மா ரடுகானு தனது 18வது வயதில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அமெரிக்க ஒப்பன் மகளிர் ஒற்றையர் பிரிவு தொடரில் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் கணக்கில் வீழ்த்தி, தொடரை வென்றார் எம்மா. இந்த வெற்றியின் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் கிராண்ட்ஸாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
1977ஆம் ஆண்டு வெர்ஜீனியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றதற்கு பிறகு இதுவரை பிரிட்டனைச் சார்ந்த யாரும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்காத நிலையில் எம்மாவின் வெற்றி பிரிட்டன் மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23வது இடத்தைப் பிடித்திருக்கிறார் எம்மா. மேலும், பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார். பிரிட்டனின் ராணி எலிசபெத், எம்மா ரடுகானுவின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
























