அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் மன்னன் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்யாவின் மெட்விடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டென்னிஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஷிப்க்கான இறுதிப் போட்டியில் 6-4, 6-4, 6-4 ஆகிய எண்ணிக்கைகளில் மெட்விடேவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று, “காலண்டர் ஸ்லாம்” பட்டம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இத்தோல்வியால் அச்சாதனை நழுவியதால் ஜோகோவிச் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
























