கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்துப் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம், ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்கிற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 -ம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமான நபர்கள் நகைக்கடன்கள் பெற்றிருந்தால், அது களையப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
























