கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 43,263 பேர் ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறைந்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 26,200 பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,681 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,90,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
























