ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் அறத்தை நிலைநிறுத்தவும், மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்த்து பெரும்பங்காற்றவும் தொடங்கப்பட்டிருக்கிறது டாட்ஸ் மீடியா.
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில் நெருக்கடியான இக்காலகட்டத்தில் டாட்ஸ் ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி நிலையில் மக்களுடன் துணை நின்று மக்களுக்காக இயங்குவதை தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கிறது டாட்ஸ் மீடியா.

சமூக வலைதளங்கள் எழுச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் யூ ட்யூப் வலைதளம் மூலம் டாட்ஸ் மீடியா களம் இறங்குகிறது. டாட்ஸ் மீடியா, டாட்ஸ் சினிமா, டாட்ஸ் மருத்துவம், டாட்ஸ் விளையாட்டு, டாட்ஸ் வாழ்வியல், டாட்ஸ் ஆன்மிகம் ஆகிய ஆறு யூ ட்யூப் சேனல்கள் மற்றும் டாட்ஸ் நியூஸ் என்கிற எழுத்து வடிவ வலைதளத்தின் மூலம் தமிழ் மக்களுடன் இணையவிருக்கிறது டாட்ஸ் குழுமம்.
அன்றாட நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சார்ந்த செய்தி மற்றும் நேர்காணல்கள் டாட்ஸ் மீடியா யூ ட்யூப் சேனலில் வெளியாகும். சினிமா என்பது நம் உணர்வோடு கலந்தது. திரைப்படங்களைக் கொண்டாடும் சமூகம் நாம். ஆகவே திரைச் செய்திகள், திரை விமர்சனம் மற்றும் திரைத்துறையினர் பேட்டிகள் ஆகியவற்றுக்காக டாட்ஸ் சினிமா யூ ட்யூப் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது.
வளமான சமூகம் உருப்பெற அனைவரும் நலம் பெற்றிருப்பது அவசியம். உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு பொது மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களின் விளக்கங்கள் டாட்ஸ் மருத்துவம் சேனலில் வெளியாகும். ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல் தமிழ் மருத்துவம், ஹோமியோபதி போன்ற பிற முக்கிய மருத்தவத்தைச் சார்ந்த மருத்துவர்களின் பேட்டிகளும் வெளியாகும்.

ஒவ்வொரு நாட்டின் பெருமையும், அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கும் விளையாட்டை மையப்படுத்தி டாட்ஸ் விளையாட்டு என்கிற சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுச் செய்திகள் மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களின் பேட்டி உட்பட விளையாட்டுத்துறை சார்ந்த அனைத்தும் இந்த சேனலில் வெளியாகும். பயணம், அழகுக்குறிப்புகள், உணவு, ஃபிட்னெஸ் ஆகியவற்றை உள்ளடக்கி டாட்ஸ் வாழ்வியல் சேனல் வெளியாகிறது.
ஆன்மிகம் என்பது மதங்களுக்குள் அடங்குவதில்லை. அது இறையுணர்வு, நன்னெறிகளை உள்ளடக்கியது. கோயில்களின் தல வரலாறு, ஜோதிடம், மதங்கள் சார் தொன்மக்கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி டாட்ஸ் ஆன்மிகம் சேனல் வெளியாகிறது. மேற்கண்ட அனைத்தும் எழுத்து வடிவில் படிக்க டாட்ஸ் நியூஸ் வலைதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.
டாட்ஸ் மீடியா குழுமம் ஓர் இலட்சிய நோக்கோடு தொடங்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. அது மேன்மேலும் வளர்ந்து செல்ல உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. எளிய மக்களின் இடர்களையும், அவர்களின் குரல்களையும் கவனப்படுத்தி அரசிடம் கொண்டு செல்வதே டாட்ஸ் மீடியாவின் முதன்மை நோக்கம்.
























