மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
இத்தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த மருத்துவக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடமும், வேலூர் சிஎம்சி 3-வது இடமும் பெற்றுள்ளன. நாட்டின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசையில் கோவை அமிர்தா விஸ்வ சத்யாபீடம் பல்கலைக்கழகம் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
























