டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவிருக்கிறது. அத்தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் முக்கிய வீரர்களாகவும். ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார் ஆகியோர் மாற்று வீரர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணியின் ஆலேசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. கேப்டனாக 2 உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தந்தவர் தோனி. ஆகவே அவர் ஆலோசகராக இருந்து வழிநடத்தும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என தோனி ரசிகர்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
























