முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது நமக்குத் தெரியும். அதுபோல, விநாயகருக்கு அறுபடை வீடுகள் இருப்பது நமக்குத் தெரியுமா. விநாயகரின் அறுபடை வீடுகள் எங்கிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில் – விநாயகரின் முதல் படைவீடு திருவண்ணாமலையில் இருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நுழைவாயிலுக்கு அருகே வடக்கு பார்த்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார் வினை தீர்க்கும் விநாயகர்.
விநாயகரின் இரண்டாவதாக இருப்பவர், விருத்தாசலம் பழமலை நாதர் கோயில் நுழைவு வாயில் அருகே உள்ள ஆழத்துப் பிள்ளையார்.
விநாயகரின் படைவீடுகளில் மூன்றாவதாக இருப்பது திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதியின் நந்திக்கு வலது புறம் அருள்கிறார் கள்ளவாரண பிள்ளையார்.

விநாயகரின் நான்காவது படைவீடோ மதுரையில் இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும் சித்தி விநாயகர் சந்நிதி. மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக இந்த கணபதி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்
விநாயகரின் படைவீடுகளில் ஐந்தாவதாக இருப்பது காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி சந்நிதி. பிள்ளையார் படைவீடுகளில் ஆறாவது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நிதியில் அருளும் பொள்ளாப் பிள்ளையார்.
























