பெண்களின் அழகில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கூந்தல் நீளமாக நன்கு அடர்த்தியாக வளர வேண்டும் என்பதுவே அனைவரது விருப்பமாகவும் இருக்கும். இயற்கையான முறையில் கூந்தல் நன்கு வளர்வதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
- கற்றாழையுடன் தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து கூந்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் உடையாமல் இருக்கும். கற்றாழைப் பசை, தேங்காய் எண்ணெய், தேன் அனைத்தையும் கலந்து உச்சந்தலையில் தடவி கூந்தலை அலசி எடுக்கலாம் அல்லது கற்றாழைப்பசையை சீயக்காயில் கலந்தும் கூந்தலை அலசலாம்.
- வேப்ப இலைகளை 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அத்தண்ணீரில் முடியை அலசி எடுக்கலாம். வேப்பிலையைத் தூளாக்கி பின் அதனை பேஸ்ட் ஆக மாற்றி கூந்தலில் தடவி பின்னர் அலசலாம்.
- 2- 3 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். அதனை பேஸ்டாக்கி உச்சந்தலையில் தடவி ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் ஊறிய பின்னர் தலையை அலசலாம்.
- நெல்லிக்காயை கொட்டை நீக்கி உலர வைத்து 6 டீஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து பேஸ்ட் ஆக்க வேண்டும். பின்னர் உச்சந்தலை முதல் தலைமுடி நுனி வரை தடவி எடுக்கவும். இதனை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்னர் தலையை அலசி எடுக்கலாம். நெல்லிக்காயுடன் சீயக்காயையும் சேர்த்து அரைத்து தடவுவதன் மூலம் இளநரை ஏற்படாமல் தடுக்கலாம்.
- தேங்காய் எண்ணெய் தடவுவது தலை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை தரக்கூடியது. தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தடவி ஆயில் மசாஜ் செய்வது கூந்தலுக்கு நல்லது. இதை இரவு நேரத்தில் தடவி இரவு முழுவதும் கூந்தலில் ஊறவைத்து மறுநாள் காலை மந்தமான நீரில் அலசி எடுக்கலாம்.
























