இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் நான்காவது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் ப்ளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இடம்பெறவில்லை. இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் கிரிகெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் “அஸ்வினை ப்ளேயிங் லெவனில் எடுக்காத முடிவுக்காக கேப்டன் கோலி நிச்சயம் வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், இங்கிலாந்து வீரர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் திறன் வாய்ந்தவர் அஸ்வின் எனவும் சுழற்பந்து வீச்சாளர் என்கிற அடிப்படையில் ஜடேஜாவைக் காட்டிலும் திறமை வாய்ந்தவர் அஸ்வின் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இல்லாதது இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
























