முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற பெயரில் படமாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த நடிகை கங்கணா ரணாவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ‘தலைவி’ பட இயக்குனர் ஏ.எல்.விஜய் உடனிருந்தார். தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமான கங்கணா இந்தியில் முக்கியமான நடிகையான பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
























