விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ பட வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் அட்லீ. இதற்காக இரண்டு ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகளில் இறங்கியிருந்த நிலையில் சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ‘தங்கல்’ பட நாயகி சான்யா மல்ஹோத்ராவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் நடிகை பிரியாமணி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் நயன்தாரா புனேவுக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் பரவலாகி வருகிறது.
























