‘சதுரங்க வேட்டை’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் அஜித்தை வைத்து ‘வலிமை’ படத்தினை இயக்கினார். நீண்ட நாட்களாக அப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘நாங்க வேற மாதிரி’ என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், படப்பிடிப்புகளுக்கு மீண்டும் அனுமதி அளித்த பிறகு அஜித் உள்ளிட்ட ‘வலிமை’ படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. எனவே படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் விரைவில் இரண்டாவது பாடல் வெளியாகலாம் என்றும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த அப்டேட்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை இச்செய்தி மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
























