ஓடிடி தளங்கள் வீறு கொண்டெழுந்து வருகின்றன. பலரும் ஓடிடி பயன்பாட்டுக்குச் செல்வதற்கான முக்கியக் காரணங்களில் இணையத் தொடரும் (web series) ஒன்று. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தமிழ், இந்தி இணையத் தொடர்களை விடவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இணையத் தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ‘Game of thrones’ ‘Breaking bad’ ‘peaky blinders’ போன்ற இணையத் தொடர்களின் வரிசையில் தமிழகத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘Money heist’ தொடரும் பரவலான வரவேற்பைப் பெற்றது. அத்தொடரின் கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனியே ரசிகர்கள் உருவானார்கள்.

இதுவரையிலும் நான்கு பாகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் ‘Money heist’ -ன் 5ம் பாகம் நாளை (செப்-3) வெளியாகவிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் முதல் முறையாக இந்த பாகம் தமிழ் டப்பிங்கில் வெளியாகவிருக்கிறது. இதனால் அத்தொடரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ் டப்பிங்கில் வெளியாவதன் மூலம் இன்னும் பரவலான மக்கள் இந்த இத்தொடரைப் பார்க்கக்கூடும்.
























