கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பங்கெடுக்காத ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது சொந்த அணியான டெல்லி கேப்பிடல்ஸில் விளையாடத் தயாராகியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காயமடைந்தார். அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் அவர் பங்கு பெறவில்லை. அதன் காரணமாக ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கொரோனா காரணமாக ஐ.பி.எல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளோடு டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. மீண்டும் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் அப்போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த அவர், கிரிகெட் அகாதமிக்குச் சென்று உடற்தகுதி பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவர் தேர்ச்சி பெற்ற நிலையில் மீண்டும் டெல்லி கேப்பிடஸ் அணியில் விளையாடவிருக்கிறார்.
























