தற்போதைய நிலவரப்படி தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. 2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தமிழில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதன் பிறகு இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவரை தெலுங்கு திரையுலகம் வாரி எடுத்துக்கொண்டது. மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ‘அல வைகுந்தபுரம்லு’ திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் இந்திய அளவில் ஹிட்டானது. அதன்பிறகு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பூஜா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் ஆனதை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பூஜாவின் உதவியாளர், ஆடை வடிவமைப்பாளர், சமையல்காரர் என பூஜாவுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது குழுவை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தென்னிந்திய நடிகைகளிலேயே சமந்தாவுக்கு அடுத்தபடியாக அதிக ஃபாலோவர்ஸைக் கொண்டிருப்பது பூஜாதான்.

























