மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரான கே.பாலகிருஷ்ணனுக்குத் திடீரென் இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கே.பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு அவர் உடல் நிலையைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
























