நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாளன்று வரும் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக மக்கள், தீபாவளி நாளன்று தான் அதிக அளவில் இறைச்சி வாங்குவது வழக்கம். இறைச்சி கடைகளை நவம்பர் 4 ஆம் தேதி மூட சென்னை மாநகராட்சியின் சில மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தீபாவளி தினத்தன்று கடைகளை மூட சொல்லி போடப்பட்டுள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் தங்களது கோரிக்கை குறித்து முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இறைச்சி வியாபாரிகள் கூறுகின்றனர். இணையத்திலும், தீபாவளியன்று இறைச்சிக் கடைகளை மூட சொல்லும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
























