நேற்று மாரடைப்பு காரணமாக, கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் திடீரென்று உயிரிழந்தார். இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பெங்களூருவில், புனித் ராஜ்குமார் மரணம் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள், புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தது பற்றி அறிந்ததும் தனியார் மருத்துவமனை முன்பாகவே திரண்டுவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்தவே காவல்துறையினர் போராட வேண்டிய இருந்தது. அதே நேரத்தில் அவரது உடல் ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நோக்கி இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் திரண்டு வந்து நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்கள்.
பெங்களூரு நகரம் முழுவதுமே சோகத்தோடு காட்சியளிக்கிறது. கண்டிர்வா மைதானத்தை சுற்றி பாதுகாப்புப்பணியில் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
























