அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் கோவாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி இன்று கோவாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இன்று காலை 10 மணியளவில் டோனா பவுலா பகுதியில் உள்ள சர்வதேச மையத்தில் கோவா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இப்பயணத்தில் அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் மீனவ சமூக மக்களை சந்தித்து பேச இருக்கிறார்.
மதியம் 12 மணியளவில் பெடிம் பகுதியில் மீனவ மக்களுடன் அவர் உரையாடுகிறார். இதன்பின்பு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார் என தகவல் வெளியானது.

தற்போது, டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் இன்று இணைந்துள்ளார்.
























