நேற்று முன்தினம் இரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் தீபாவளிக்காக அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இந்த கொடூர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பட்டாசுக் கடை தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் நிவாரண உதவி வழங்கினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, தீ விபத்து நடந்த பட்டாசுக் கடையை நேரில் சென்று பார்வையிட்டு பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பட்டாசு கடை உரிமையாளரும், பாஜக நிர்வாகியுமான செல்வகணபதி மீது, அனுமதி இன்றி அதிக அளவு பட்டாசு வைத்திருந்ததாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
























