காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரியில் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக பலியான 10 பேரது குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை காஷ்மீர் மாநிலம் தாத்ரியிலிருந்து தோடா நோக்கிச் சென்ற சிறிய பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயடைந்துள்ளனர். மீட்புபடையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டதோடு காயமாடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ‘இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கலையும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்பவர் நலமடைய பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
























