‘ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம்’ (ANTHE – அந்தே’21) என்ற தேர்வு, 7 லிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுடைய மருத்துவர் மற்றும் பொறியாளர் ஆவதற்கான கனவை நனவாக்கக்கூடிய முதல்படியாக இருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் தேசிய அளவில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 100% வரையிலான ஊக்கத்தொகை, ரொக்கப்பரிசு மற்றும் இலவசமாக நாசா செல்வதற்கான வாய்ப்பையும் பெறுவர் என்று தெரிவித்துள்ளது ஆகாஷ் நிறுவனம்.
ஆகாஷ் பைஜுஸ்(AKASH BYJUS) நடத்தும் நீட் மற்றும் ஜெஈஈ பயிற்சி வகுப்புகளுக்கு உதவியாக இருப்பதுடன் இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு பல கட்டண சலுகை பெறவும் உதவுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் தங்களுடைய பலத்தை தெரிந்து கொள்வதுடன் தங்களின் பலவீனங்களையும் மாணவர்கள் தெரிந்து கொண்டு அதை ஆகாஷ் பைஜூஸ் வல்லுநர்களின் உதவியுடன் சரி செய்து கொள்ளவும் உதவுகிறது.
- உங்களுடைய மருத்துவர் மற்றும் பொறியாளர் ஆகும் கனவை நனவாக்கிக் கொள்ள
- 100% ஊக்கத் தொகையை பெற
- நாசா செல்வதற்கான இலவச வாய்ப்பை பெற
- ரொக்கத் தொகை வெல்ல
- தேசிய அளவில் தங்களுடைய தர வரிசையை மாணவர்கள் தெரிந்துகொள்ள
- ஸ்கூல் பூஸ்டர் கோர்ஸை (மேரிட்டிநேஷன் வழங்கும்) இலவசமாக பெற
ANTHE – அந்தே’21 க்கு எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்?
- உங்களின் மொபைல் எண்ணை பதிவேற்றவும்
- உங்கள் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி யை பதிவுசெய்யவும்
- உங்களின் தகவல்களை பதிவேற்றி கட்டணத்தை செலுத்தவும்
- தேவையான தகவல்களை பதிவேற்றி உங்களின் ரெஜிஸ்ட்ரேஷனை முடிக்கவும்
- உங்களின் ஆன்ட்டி ANTHE – அந்தே’21 அட்மிட் கார்டை ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்தவுடன் பெற்றுக் கொண்டு ஸ்கூல் பூஸ்டர் கோர்ஸை இலவசமாக பெற்றுக்கொள்ளவும்
ANTHE – அந்தே’21 பலன்கள்
- ஊக்கத்தொகை மற்றும் ரொக்கத் தொகை அளிப்பதுடன் இத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பான மதிப்பெண் பெறும் 5 அதிர்ஷ்டசாலி மாணவர்கள் இலவசமாக நாசா சென்று வருவதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.
- தேசிய அளவில் மாணவர்கள் தங்களின் திறமையை தெரிந்து கொள்வதுடன் அவர்களுடைய மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்விற்கான (நீட் ஜேஇஇ) பயிற்சிகளையும் ஆகாஷ் பைஜுஸ் வல்லுனர்களின் துணையுடன் தொடங்க வாய்ப்பு கிடைக்கிறது.
- ANTHE – அந்தே’21 தேர்விற்கு ரெஜிஸ்டர் செய்யும் மாணவர்கள் மெரிட்னேஷன் ஸ்கூல் பூஸ்டர் கோர்ஸ் என்ற, மாணவர்களை சுயமாக ஊக்குவித்து படிக்க உதவும், கோர்சை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
- தங்களுடைய பள்ளியில் நடக்கும் எல்லா தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக எழுத இந்த பயிற்சி வகுப்பு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது.
32 வருடங்களுக்கும் மேலாக ஆகாஷ் கல்வி நிறுவனம், மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்யும் ஒரு கல்வி நிறுவனமாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 1988 இல் தொடங்கப்பட்ட ஆகாஷ் இன்று இந்திய அளவில் 200க்கும் மேற்பட்ட கல்வி மையங்களுடன் 2200 வல்லமை நிறைந்த ஆசிரியர்களுடன் இரண்டரை லட்சத்திற்கும் மேலான மாணவர்களுடன் மற்றும் 85 ஆயிரத்திற்கும் மேலான நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் வெற்றிகரமாக இத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி கற்கும் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க, உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறையை வெற்றிகரமாக அளிக்கும் பைஜூஸ் உடன் கைகோர்த்து பயணிக்க தொடங்கியுள்ளது.
மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் அரசு தேர்வுகளுக்கும், கேவிபிஒய், என்டிஎஸ்சி, ஒலிம்பியாட் மற்றும் பல தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் பைஜூஸ் முழுமையான தேர்வு பயிற்சி சேவையை வழங்குகிறது.
























