அஜித் தனது நீண்ட நாள் கனவான, பைக்கில் உலகத்தை சுற்றிவர வேண்டும் என்பதை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார்.

நடிகர் அஜித் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போனீ கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.

பயணத்தை தொடங்குவதற்கு முன், ஏற்கனவே இந்த பயணத்தை மேற்கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணையும் நடிகர் அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வாகா எல்லையில் அஜித் பயணத்தை தொடங்கினார். கையில் தேசியக்கொடி ஏந்தியப்படி அவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த போனி கபூர், ’லட்சியத்துக்காக தல அஜித் வாழ்வதையோ, அவர் கனவை நிஜமாக்க உழைப்பதையோ யாராலும் தடுத்த நிறுத்த முடியாது’ என்று ட்வீட் செய்துள்ளார்.
























