செனெகல் நாட்டில் திடீரென ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
செனெகல் நாட்டின் தெற்கே காசாமன்ஸ் பகுதியில் அமைந்த சுரங்கம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த சுரங்கம் சமீபத்தில் ஏற்படுத்திய சுரங்கங்களில் ஒன்றா? அல்லது கனமழையால் வெளிப்பட்ட பழைய சுரங்கங்களில் ஒன்றா? என சரியாக தெரியவில்லை.
























