தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சென்னையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளியன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
























