கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான 2.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் கண்ணூர் சர்வதேச விமான நிலையதுக்கு சார்ஜாவிலிருந்து நேற்று முன்தினம் முகமது ஷான் மற்றும் ஆசிஃப் கலீல் ஆகிய பயணிகள் வந்துள்ளனர். சுங்கத்துறையினர் வழக்கம்போல பயணிகளிடம் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் இருவரும் இணைந்து 2.8 கிலோ தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களைக் கைது செய்த சுங்கவரித்துறையினர் அவர்கள் கடத்தி வந்த 2.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1.41 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 14ம் தேதி துபாயிலிருந்து கொச்சின் விமான நிலையத்துக்கு 1.5 ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























