மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, ஜூலை 1 முதல் வழங்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மத்திய அரசு பணியாளர்களுடன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த 3% அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
























