டென்மார்க் நாட்டில், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த நெஸ்லிஹான் யிஜித் இன்று விளையாடினர். சிந்து, 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர். இதில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார். போட்டி 30 நிமிடங்களில் முடிந்தது. இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார்.
























