தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது பிஎம்எஸ் தனியார் பெட்ரோல் பங்க். இன்று வாடிக்கையாளர்கள், வழக்கமாக பெட்ரோல் போடும் பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். பங்க் வரைக்கும் பந்தாவாக வந்த வாகனங்கள் பெட்ரோல் போட்டு திரும்பும்போது கோளாறு செய்துள்ளது.
மெக்கானிக்குகள், வண்டியை பரிசோதித்துவிட்டு, பெட்ரோலை பிடித்து பார்க்க எல்லா வண்டியிலும் பெட்ரோல் தண்ணீர் கலந்து இருந்துள்ளது. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் நேராக பெட்ரோல் பங்க் முன் குவிந்தனர். அங்கு பெட்ரோல் போட காத்திருந்த வாகன ஓட்டிகளிடம் விவரத்தை எடுத்துக்கூறியுள்ளனர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் இருந்த பம்ப்-யில் பெட்ரோலை கேனில் பிடித்துப் பார்த்தபோது, அதில் பாதி பெட்ரோல் மற்றும் தண்ணீரை இருந்துள்ளது. இதனால் பங்க் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளார்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் பங்கின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
























