கன்னியாகுமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு படையினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக தங்களது வீட்டில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
























