19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார்.
21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியவர் அவி பரோட். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், “அவி பரோட்டின் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதகாவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும்” தெரிவித்துள்ளது.

29-வயதே ஆன கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. 2019-20 ஆண்டு ராஞ்சி கோப்பையை வென்ற சவுராஷ்டிர கிரிக்கெட் அணியில் அவி பரோட் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
























