இன்று வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தஹார் நகரில் அமைந்துள்ள மசூதியில் வழக்கம்போல் தொழுகை நடந்தது. ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்த மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் காயமடைந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இத்தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது. 53 பேர் காயமடைந்து உள்ளனர்.
























