அமைச்சர் கே.என் நேரு சட்டப்பேரவையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியபோது, ”2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும் என்றும், 2021ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கருதப்படுவதாகவும்” குறிப்பிட்டார்.
பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாக விரிவாக்கம் செய்ய கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாக கூறி பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
புதிய நகராட்சிகள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கனசாலை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கரூர் மாவட்டம் புகலூர், பள்ளப்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
























