கோவிட் 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை அவசரகாலத்தில் குழந்தைகளுக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவிட் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கோவிட்ஷீல்டு தடுப்பூசி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனிடமிருந்து காப்புரிமை பெற்று இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவவனம் கோவேக்சின் எனும் தடுப்பூசியைத் தயாரித்தது. இதுவரையிலும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த கோவேக்சின் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கோவேக்சின் செலுத்தலாமா என்பது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சஞ்சய் கே.ராய் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 – 18 வயது குழந்தைகள், 6 – 12 வயது குழந்தைகள், 2- 6 வயது குழந்தைகள் என மூன்று வயதுக் குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் தற்போது செலுத்தப்பட்டு வரும் கோவேக்சின் குழந்தைகளிடம் எதிர்மறையான எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும், அவசர நிலையில் குழந்தைகளுக்கும் கோவேக்சின் தடுப்பு மருந்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவை ஏற்று subject expert committe கோவாக்சினை அவசர நிலையில் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.
























