ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதி தோல்வியடைந்த நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கிரிகெட் விளையாடும் வரையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி விளையாடும் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது பெங்களூரு அணி. இதன் மூலம் அந்த அணி வெளியேறிய நிலையில் இது குறித்து கோலி மனம் திறந்திருக்கிறார்.
“பெங்களூரு அணியின் கேப்டனாக நான் நிறைய இளம் வீரர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தேன். நான் எனது முழு முயற்சியையும் செய்து வெற்றிக்காக உழைத்தேன். 120 சதவிகிதம் என்னால் முடிந்த அளவுக்கான உழைப்பைச் செலுத்தி விட்டேன். இந்தத் தோல்வியையும் கடக்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன். நான் கிரிகெட் விளையாடும் வரையிலும் ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் எனது கடைசி போட்டி வரையிலும் பெங்களூரு அணிக்காக உழைப்பேன்” எனத்தெரிவித்துள்ளார். தோல்வியால் துவண்டிருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு கோலியின் இந்த பேட்டி ஆறுதலாக இருந்தது.
























