9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டத் தேர்தல் ஆறாம் தேதி முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி இந்த 9 மாவட்டங்களில் 6.34 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 70.62% , கள்ளக்குறிச்சி – 65.84%, ராணிப்பேட்டை – 63.81%, தென்காசி – 57.62%, செங்கல்பட்டு – 56.78%, காஞ்சிபுரம் – 55.90 %, வேலூர் – 54.50 %, திருப்பத்தூர் – 54.33 %, நெல்லை – 50 % என்கிற கணக்கில் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
























