பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி திருக்கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்களின 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி சாமி வேடமிட்டு பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்கள் தொடர்ந்து இடைவிடாது 8 மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனையில் ஈடுபட்டனர்.

நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார். தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை வாசித்து நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
























