2021ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தான்சானியா போன்ற மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த எழுத்தாளருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். 1948m ஆண்டு பிறந்த அப்துல் ரசாக் காலனியாதிக்கம் குறித்தும் அகதிகள் வாழ்வை மையப்படுத்தியும் நாவல்கள் எழுதியுள்ளார். விடுதலைக்கான குரலாய் ஒலித்த அவரது எழுத்துகளுக்காக இவ்விருது அளிக்கப்பட்டிருக்கிறது.
























