முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
6 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தார்கள். மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றாகள்.
துப்பாக்கி ஏந்திய போலீசார், வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
























